ஐக்கிய அமீரக வங்கியிலிருந்து இந்தியாவுக்கு உடனே பணம் அனுப்பலாம்

துபை,மே.6-ஐக்கிய அமீரக வங்கியானஎமிரேட்ஸ் என்.பி.டி.யிலிருந்து இந்தியாவுக்கு உடனே நேரடியாக பணம் அனுப்பலாம். இதனால் இந்தியாவில் உள்ளஅனைத்து வங்கிகளுக்கும்பணம் அனுப்பும் வசதி இணைக்கப் பட்டுள்ளது. இந்த சேவை இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பணிகளில் முதலாவதாக அயல்நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இங்குள்ளஎச்.டி.எஃப்.சி. வங்கிகளுக்கு60 விநாடிகளில் பணம் அனுப்பலாம். இதனை இந்தியாவில் மற்றவங்கிகளுக்கு மாற்றிக்கொள்ளலாம். இந்த சேவையும்ஒரு மணி நேரத்தில் நிறைவுபெற்று பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
ஐக்கிய அமீரகத்திலிருந்து இந்தியாவிலுள்ள எச்.டி.எஃப்.சி.மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிகளில் இந்த சேவை இலவசமாக வழங்கப் படுகிறது.மற்ற வங்கிகளுக்கு பணபரிமாற்றம் செய்வதற்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.10வசூலிக்கப் படுகிறது.
அயல்நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தம் குடும்பத்தாரின் அவரசத் தேவைகளுக்காக பணம்அனுப்புவதில்உள்ள தாமதத்தையும், சிக்கலையும் நிவர்த்தி செய்வதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று எமிரேட்ஸ்என்.பி.டி.யின் சில்லறை வங்கிமற்றும் பணப்பராமரிப்புப் பிரிவுபொது மேலாளர் சுவோ சர்க்கார்தெரிவித்தார்.