ஒரே தெருவில் கைவரிசை ஆளில்லா வீடுகளில் நகை, பணம் கொள்ளை

15 Feb 2013 11:03, 
(15 Feb) கும்பகோணம், : கும்பகோணம் அடுத்த சுவாமிமலையல் ஒரே தெருவில் பூட்டியிருந்த வீடுகளில் திருட்டு மற்றும் திருட்டு முயற்சி நடந்துள்ளது. இதில் தங்க நகைகள் என நினைத்து மர்ம நபர்கள் கவரிங் நகையை அள்ளிச்சென்றனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த சுவாமிமலை காயிதேமில்லத் நகர் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் ராஜ்முகமது மனைவி ஜன்னத்பீவி. இவர்கள் 2 நாட்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு மும்பையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மர்மநபர்கள் வீட்டின் முன்புற கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அங்கிருந்த பொருட்களை எல்லாம் கலைதது போட்டனர். ஆனால் நகையும், பணமும் இல்லாததால் ஏமாற்றமடைந்தனர். 


அதே தெருவில் சாதிக்பாட்சாவின் வீடு உள்ளது. சாதிக்பாட்சா குவைத்தில் வேலை செய்கிறார். இதனால் இவரது மனைவி பாத்திமாபீவி குழந்தைகளோடு சுவாமிமலையில் வசிக்கிறார். இந்நிலையில் பாத்திமாபீவி நேற்றுமுன்தினம் வீட்டை பூட்டிவிட்டு தங்க நகைகளை அணிந்துகொண்டு கும்பகோணத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று இரவு அங்கேயே தங்கிவிட்டார். சாதிக்பாட்ஷாவின்வீட்டின் கதவையும் மர்மநபர்கள் கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்து பீரோவையும் உடைத்து அதில் இருந்து 2 பவுன் நகையையும், ரூ.16,500ஐயும் திருடிச்சென்றனர். வீட்டிலிருந்த நகையை பாத்திமாபீவி அணிந்து சென்றதால் அந்த நகைகள் தப்பியது.

அதே தெருவை சேர்ந்தவர் முகமதுபாரூக். இவரது மனைவி ஜூனைதாபேகம். முகமதுபாரூக் துபாயில் வேலை செய்து வருகிறார். ஜூனைதாபேகம் உறவினர் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்றுவிட்டார். அவர் வீட்டின் கதவையும் கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 2 பீரோவையும் உடைத்தனர். அப்போது பீரோவில் இருந்த கவரிங் நகைகளை தங்க நகைகள் என நினைத்து மர்ம நபர்கள் அள்ளிச்சென்றனர். இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நன்றி...
http://m.newshunt.com/Dinakaran/Tanjore/19687675


http://dinamani.com/edition_trichy/tanjore/article1464839.ece