அழகிய கடன் I.A.S. அகாடமி - வேண்டுகோள்


அழகிய கடன் அறக்கட்டளை சார்பில் கடந்த ஜனவரி மாதம் "அழகிய கடன் I.A.S. அகாடமி" என்ற பெயரில் IAS/IPS பயிற்சி மையம் ஒன்று துவங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்!!.









நோக்கம்

கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் முஸ்லிம் சமுதாயம் மேம்படவும், இறையச்சம் உள்ள முஸ்லிம்கள் அதிகார மையத்தில் அமர்ந்து அனைத்து துறைகளையும் இயக்கும் உயர் பதவியை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



சேர்க்கை (Admission)
இதற்கான முதற்கட்ட சேர்க்கைக்காக கடந்த ஜனவரி மாதம் 26-ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 120 முஸ்லிம் மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் நேர்முகத்தேர்வுக்கு (Interview) பிறகு சுமார் 20 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
IAS Academy Entrance exam

பயிற்சி

இந்த 20 மாணவர்களுக்கு I.A.S. பரீட்சைக்கு தேவையான பயிற்சிகள் முழு வீச்சில் தரப்பட்டு வருகிறது. மேலும் பயிற்சி, தங்குமிடம், உணவு, புத்தகங்கள் ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது, அல்ஹம்துலில்லாஹ்!
தற்பொழுது திறமையான பேராசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களால் பாடங்கள் பயிற்றுவிக்கபடுகின்றன. இம்மாணவர்கள் அனைவரும் இன்ஷா அல்லாஹ் மே 20-ம் தேதி நடைபெறவிருக்கும் I.A.S பரிட்சையில் (preliminary) கலந்து கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர். இவர்கள் வெற்றி பெற வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். ஆமீன்.

    நிர்வாகக்குழு

     
    இந்த பயிற்சி மையம் மௌலானா ஷம்சுதீன் காசிமி அவர்களை தலைவராக கொண்டு, மற்றும் Governing Body அமைப்பில் அபுல் ஹசன் I.A.S. (retired), R.D.நசீம் I.A.S., பேரா. இஸ்மாயில் (முன்னாள் முதல்வர், அரசு I.A.S பயிற்சி மையம்), திரு. கார்த்திகேயன் (இயக்குனர், மனித நேயம் I.A.S பயிற்சி நிலையம்), S.அஹ்மத் மீரான் (Professional Couriers) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் மேலான வழிகாட்டுதலுடன், சைதை S.துரைசாமியின் மனிதநேய I.A.S. பயிற்சி மையத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது.

செலவுகள்

இந்த பயிற்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் பயிற்சியாளர் சம்பளம், ஊழியர் சம்பளம், உணவு, தங்குமிடம், புத்தகங்கள் போன்ற அனைத்துக்கும் சேர்த்து ஒரு மாதத்திற்கு ரூ. 1 இலட்சம் முதல் 1.25 இலட்சம் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வேண்டுகோள்

இஸ்லாமிய சமுதாயம் மேம்படவும், இளைஞர் சமுதாயம் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி வீறு நடை போடவும் ஆரம்பிக்கப்பட்ட இந்த உன்னதமான முயற்சியில் உங்களின் பங்களிப்பின்றி நாங்கள் வெற்றி பெற முடியாது. எனவே, வல்லோன் அல்லாஹ்வின் அருட்கொடை மீதும், உலகிலேயே தர்ம சிந்தனை உள்ள சமுதாயமான நம் சமுதாயத்தின் தர்ம சிந்தனையின் மீதும் நம்பிக்கை வைத்து இம்முயற்சியில் இறங்கியுள்ளோம். இந்த அற்புதமான இறைப்பணியில் தாங்களும் பங்கெடுத்து தங்களால் முடிந்த பொருளாதார உதவிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் நம்முடைய முயற்சிகளை இக்லாசான முயற்சிகளாக கபூல் செய்து அதற்குரிய பரிபூரண கூலியை தந்தருள்வானாக. ஆமீன்.

தொடர்புக்கு
அழகிய கடன் அறக்கட்டளை,
மக்காஹ் மஸ்ஜித் வளாகம்,
822, அண்ணா சாலை,
சென்னை - 600 002.
Ph. 044-4214 1333, Cell: 9840889678, 9840899012, email :admin@makkamasjid.com

 நன்றி- மக்கா மஸ்ஜித்.காம்