ஐரோப்பாவில் புதிய இறை இல்லங்கள் உதயம்


ஃபிரான்ஸின் 'Marseille - மர்ஸை'யில் புதிய மஸ்ஜித்
''அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)'' (அல் குர் ஆன் 9:33)
இஸ்லாத்துக்கு எதிராக என்னென்ன பொய் மூட்டைகளை அவிழ்த்து விட முடியுமோ அவ்வளவையும் மிக சாமர்த்தியமாக மேற்கத்திய நாடுகளின் அரசும் அவைகளின் ஊடகங்களும் செய்துகொண்டிருக்கும் அதே வேளையில் ஏக வல்ல அல்லாஹ்அவர்களின் அத்தனை சூழ்ச்சியையும் தவிடுபொடி ஆக்கியே வருகிறான் என்பதற்கு அந்நாடுகளில் இஸ்லாம் அதி வேகமாக பரவி வருவதே சாட்சியாக இருக்கிறது.மேலுள்ள திருக் குர் ஆனின் வசனம் கூட அதனை உறுதி செய்கிறது.
சுவிட்ஜர்லாந்தில் பள்ளிவாசல் மினாரா கட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள அதே வேளியில் ஐரோப்பாவின் மிக முக்கியமான இரு நாடுகளான ஜெர்மனியிலும், ஃபிரான்சிலும் புதிதாக இரு இறையில்லங்கள் இறையொளி(லி)யை ஓங்கச்செய்ய எழுந்துள்ளன. அதை நிரூபிக்கும் விதமாக ஃபிரான்சிலும் ஜெர்மனியிலும் புதிதாக உயர்ந்தோங்கி நிற்கும் புதிய 
'மஸ்ஜித்'களே சாட்சி.
ஃபிரான்ஸில் மிகப்பெரிய பள்ளிவாசல்
பெண்ணியத்திற்கு கண்ணியம் அளிக்கும் ஹிஜாபை தடை செய்ய முயன்றுகொண்டிருக்கும் பிரான்ஸின்Marseille - மர்ஸை (ஃபிரென்ச் உச்சரிப்பு இதுதான்என்ற நகரத்தின் செயின்ட் லூயிஸ் என்ற பகுதியில் மிகப்பெரிய பள்ளிவாசல் கட்டுவதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளது.
இந்நகரத்தில் மட்டும் சுமார் 2,50,000 முஸ்லிம்களும் பிரான்ஸ் முழுமைக்கும் சுமார் 60 லட்சம் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வருகிற 2012 ஆம் ஆண்டு திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. சுமார் 22 மில்லியன் யூரோமதிப்பிலான இப்பள்ளியில் குர் ஆன் வகுப்புகள், நூலகம், உணவு மற்றும் தேநீர் விடுதிகள் உள்ளடங்கியதாக இருக்கும்.
ஒரே நேரத்தில் சுமார் 7000 பேர் தொழுகை நடத்த முடியும். இப்பள்ளியில் அமையயுள்ள மினாராவானது 25 மீட்டர் (82 அடி) உயரம் கொண்டதாக இருக்கும். பிரான்ஸ் அரசு இஸ்லாத்திற்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக எத்தனை எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த இயலாது என்பதற்கு இது ஒரு சான்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ஜெர்மனியில் புதிய இறை இல்லம் உதயம்
உண்மை மார்க்கமான இஸ்லாமிய மார்க்கம் ஐரோப்பாவில் அதிவேகமாக வளர்ந்து வருவதன் மற்றுமொரு மைல்கல்லாக, 21/05/2010 அன்று  
ஜெர்மனியிலும் மிகப்பெரிய பள்ளிவாசல் திறக்கப்பட்டுள்ளது.
துருக்கியர்கள் அதிகமாக வாழும் பெர்லின் நகரின் குரூஸ்பெர்ங் பகுதியில் சுமார் பத்து மில்லியன் யூரோசெலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள இப்பள்ளியின் கோபுரம் முழுமையும் கண்ணாடிகளால் கட்டப்பட்டுள்ளது.
சுமார் 5000 சதுர அடி பரப்பளவில் ஆறு அடுக்கு கட்டிடமாக கட்டப்பட்டுள்ள இப்பள்ளியில் நான்கு சிறிய மினாராக்களும் அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் சுமார் ஆயிரம் நபர்கள் இங்கே தொழுகைநடத்தமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இறை இல்லத்திற்கு லெபனான் மற்று பாலஸ்தீனத்தை சார்ந்தவர்கள் மட்டுமே முழு பொருளூதவி அளித்துள்ளனர் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
இதுபோன்று இன்னும் ஆயிரம் ஆயிரம் இறை இல்லங்கள் உலகம் முழுக்க கட்டியெழுப்பவும், அனைத்து இறை இல்லங்களும் முஸ்லிம்களால் நிரம்பிவழியவும் அல்லாஹ்விடம் பிராத்திப்போமா