தர்மம் தலைகாக்கும்...தக்க சமயத்தில் சோமாலி குழந்தைகளின் உயிர் காக்கும் ..

தர்மம் தலைகாக்கும்...தக்க சமயத்தில் 
சோமாலி குழந்தைகளின் உயிர் காக்கும் ..

நாமும் ஒரு சோமாலியக் குழைந்தைக்கு உணவு கொடுப்போம்.
அல்ல ! அல்ல ! உயிர்க் கொடுப்போம் ...
கணினியில் படித்தப் போது ! கண்களில் ரத்தம் கசிந்தது !
நித்தம் ஒருநூறு குழந்தை செத்து மடிகின்றன
சத்தான உணவு கிட்டவில்லை ! என்பது மட்டுமல்ல ! இனி 
செத்தாலும் உணவு கிட்டாது, என்ற ஏக்கத்திலேயே !
ஏங்கி சாகும் கொடுமைதான் அங்கே ஓங்கி நிற்கிறது !நூறடி தோண்டினாலும் நீரடிநிலையில்லை ! ஆகவே 
ஓரடி எடுத்துவைக்க ! ஊட்டச்சத்து உணவும் கிட்டவில்லை,
வானம் பார்த்த பூமியாக இன்று சோமாலியா !!!!!!!
இப்படியும் ஒரு பூமியா ??? என
உலக பூலோக ரேகையில் ஓர் ஆச்சர்ய பார்வை !
உலகமே உள்நோக்கிக் கொண்டிருந்தாலும் 
இன்னும் ஏனோ ? சோமாலியா குழைந்தைககளின் 
சாவு குறையவில்லை ?????????????

அதற்க்கு சரியான காரணம் ஏனோ? உலகிற்கு புரிவில்லை !
இது ! இறைவனின் சாபமா ???????
சத்தான உணவு கிட்டாத மக்களுக்கு !
துண்டு ரொட்டியாவது கொடுக்கலாமே !
நிரம்ப தேவையில்லை ? நம்மால் இயன்றதை ....

நம் உயிர் குடிக்கும் !
இழுத்து போடும் ஒரு துண்டு சிகரெட்டை
மிச்சப் படுத்தினால் போதும் ! ஒரு சோமாலியா குழந்தைக்கு
உயிர் கொடுக்கலாம் .....

தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை ( TMCA )
தங்கள் கொடுக்க இருக்கும் சிறு உதவியை முறையாக அனுப்ப 
ஏற்பாடு செய்துள்ளது.

மனமுவந்து கொடுப்பவர்கள் தங்களின் பங்களிப்பை 
எண்ணி வழங்கலாம் ! என்னாமல் வழங்கலாம் !
என்னும்போதெல்லாம் !அள்ளி வழங்கலாம் !

அணுகுங்கள் ....குவைத் TMCA நிர்வாகிகளை ..

94420919/97936196/99841228/66345333/97243382/66530968/99382025/97869749.

மற்ற நாடுகளில் இருக்கும் நமது தமிழர்கள் அனைவரும் சோமாலியக் குழைந்தைக்கு உணவு கொடுப்போம்.