நோன்பின் மாண்பு

1. புனித மிகு ரமலானில் புண்ணியத்தை தேடுங்கள்.

2. கண்ணியமாய் நோன்பிருந்து கடமையை நிறைவேற்றுங்கள்.

3. இறையச்ச உணர்வோடு இரவு பகல் தொழுதிடுங்கள்.

4. திருமறையைப் பொருளுணர்ந்து திருத்தமுடன் படித்திடுங்கள்.

5. சுன்னத்து நஃபிலான வணக்கங்களை வணங்கிடுங்கள்.

6. அருள்மறையை படித்துணர்ந்து அதன்படி செயலாற்றுங்கள்.

7. கடமையான ஜக்காத்தை கவனமாக வழங்கிடுங்கள்.

8. தான தர்மங்களை தாராளம் கொடுத்திடுங்கள்.

9. ஆடம்பர வீண்விரயச் செலவுகளை தவிர்த்திடுங்கள்.

10. fபித்ரு சதகாக்களை பிரியமுடன் வழங்கிடுங்கள்.

11. அவதூறு, புறம்பேசல் அடியோடு அகற்றிடுங்கள்.

12. தற்பெருமை, ஆணவத்தை, அகந்தையினை அழித்திடுங்கள்.

13. சின்னத்திரை நிகழ்ச்சிகளை சுத்தமாய் மறந்திடுங்கள்.

14. தினந்தோறும் இறைவனிடம் பிழைப்பொறுப்பை தேடுங்கள்.

15. திக்று, தஸ்பீஹ்களை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்.

16. அண்ணலார் நபிமீது அதிக சலவாத்து சொல்லுங்கள்.

17. பொன்னான நேரங்களை புண்ணியமாய் செலவிடுங்கள்.

18. நல்லொழுக்க நற்பண்பு உடையோராய் வாழ்த்திடுங்கள்.

19. அல்லாஹ், ரசூல் காட்டிய நெறிமுறையில் வாழ்ந்திடுங்கள்.

20. மறுமையின் வெற்றிக்கு வழிமுறையை தேடுங்கள்.