மே 6, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் இரத்ததான முகாம்

மே 6, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் இரத்ததான முகாம்

துபாய் ஈமான் அமைப்பு மற்றும் துபாய் தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் இரத்ததான முகாம் 06.05.2011 வெள்ளிக்கிழமை காலை எட்டு மணி முதல் மாலை 2.30 வரை ஈடிஏ அஸ்கான் ஹவுஸில் நடைபெற இருக்கிறது.இம்முகாமிற்கு ஈடிஏ அஸ்கான் குழும மேலாண்மை இயக்குநரும், ஈமான் அமைப்பின் தலைவருமான அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன் அவர்கள் தலைமை வகிக்கவும், இந்திய கன்சல் ஜெனரல் திருமிகு சஞ்சய் வர்மா இரத்தான முகாமை துவக்கி வைக்கவும் இசைந்துள்ளார்கள்.இரத்ததான முகாமிற்கான இடவசதியினை ஈடிஏ அஸ்கானும், ஊடக அணுசரனையினை மூன் தொலைக்காட்சியும் வழங்கியுள்ளன.தானங்களின் சிறந்த தானமான ரத்ததானம் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்கள் தங்களது பெயர்களை கீழ்க்கண்ட ஈமான் சங்க நிர்வாகிகளிடம் முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

DUBAI : முதுவை ஹிதாயத் : 050 51 96 433HOR AL ANZ : நாகூர் எம்.எஸ். அப்துல் காதர் – 055 76 56 511D BLOCK : காயல் எஸ்.எம். முஹம்மது ஈசா – 055 4063 711TAMIL BAZAR : வி. களத்தூர் ஷாகுல் ஹமீது – 050 8834 849ASCON HOUSE : பெரம்பலூர் உஸ்மான் அலி - 055-2201300Gulf Air Building : தேவகோட்டை அப்துல் ரசாக் : 055 4145068

இத‌ன் மூல‌ம் சேக‌ரிக்க‌ப்படும்‌ ர‌த்த‌ம் குழ‌ந்தைக‌ளின் ம‌ருத்துவ‌ சிகிச்சைக்கும், அவ‌ச‌ர‌ கால‌ அறுவை சிகிச்சை உள்ளிட்ட‌ ப‌ல்வேறு ம‌ருத்துவ‌ப் ப‌ணிக‌ளுக்கு ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட இருக்கிறது.

ரத்ததானம் செய்வோம் ! மனிதம் காப்போம் !!

குறிப்பு :
ரத்ததானம் வழங்க விரும்புவோர் கடந்த மூன்று மாதத்திற்குள் ரத்ததானம் செய்திருக்கக் கூடாது.