இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்


சகோதர சகோதரிகளே.
உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாகநாம் நம் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டால் உணர்ச்சி மிகுதியால் சில நேரம் நம்முடைய துணையிடம் / காதலியிடம் / நிச்சயம் முடிக்கப்பட்ட பெண்ணிடம் தொலைபேசியில் / கைப்பேசியில் / இணை தொலைபேசி என்று சொல்லக்கூடிய வாய்ப் பேசிகளில் (Voip Phones) பேசும் போது எல்லை மீறி அந்தரங்க விஷயங்களை பேசி விடுகிறோம். இது யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றோ அல்லது யாரும் இந்த பேச்சுகளை ஒட்டு கேட்க முடியாது என்றோ நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படி நீங்கள் யாரேனும் நினைத்திருந்தால் தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். என்னுடைய ஆசிரியர் சொன்னதை இங்கு நினைவு கூற ஆசைப்படுகிறேன். அதாவது “அறிவியல் வளர வளர சௌகரியங்கள் வளரும், ஆனால் இறுதியில் அந்த அறிவியல் அழிவுக்கே வழிவகுக்கும்”. இது எப்படி அழிவுக்கு வழி வகுக்கும் என்ற சிந்தனைக்கு போகாமல் நம்முடைய தலைப்புக்கு வருவோம். சமீபத்தில் அப்படி தாறுமாறாக நிதானம் இழந்து தன்னுடைய துணையிடம் பேசியதை இண்டெர்நெட்டில் கேட்டு விட்டு அதிர்ந்து விட்டார் ஒரு நண்பர். அதை அவருடைய துணையிடம் சொல்லி நக்கீரனில் புகார் கொடுக்க சொல்லியிருக்கிறார். அது சம்பந்தமாக நக்கீரனில் வெளிவந்திருக்கும் செய்தி தொகுப்பு..

க்ளிக் ப்ளிஸ்