சவுதியில் வாகன ஓட்டுனரா நீங்கள்? கவனிக்கவும்.

சவூதி அரேபியவில் பணிபுரியம் நீங்கள் சொந்தமாக வாகனம் வைத்திருக்கிறீர்களா?அல்லது வாகன ஓட்டுனரா? நீங்கள் தெரிய வேண்டியவைகள் சில...

நமது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த கட்டுரையை எழுதுகிறேன்.சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் போக்குவரத்து கட்டுப்பாட்டு முறைகளை அதிநவீனமயமாக்கி உள்ளது அது போல் குற்றங்களுக்காக அபராதமும் கடுமையாக்கப்பட்டுள்ளது அது பற்றிய ஒரு பார்வை.சவூதி அரேபியாவின் முக்கிய 8 நகரங்கள் போக்குவரத்து கண்கானிப்பு முறைகளை டிஜிட்டல் மயமாக்கியுள்ளது அதன் மூலம் போக்குவரத்து குற்றங்களை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.அந்த வகையில் அதிக வேகம் செல்லும் வாகனங்கள் அதி நவீன டிஜிட்டல் கேமராக்கள் மூலம் நீங்கள் எவ்வளவு விரைவாகச் சென்றாலும் உங்களது வாகனம் / நீங்கள் பயணித்த சாலை / தேதி- நேரம் ஆகியவைகளுடன் புகைப்படம் எடுக்கப்பட்டு உடனடியாக தேசிய தகவல் பாதுகாப்பு மைய கணனியில் தகவல்கள் உள்ளீடு செய்யப்பட்டு அந்த வாகன உரிமையாளரின் பெயரில் அபராத தொகை கணக்கீடு ‍செய்து உடனே அவரது கண்கில் அமலுக்கு வந்து விடும். அந்த அபராத தொகையை பதிவு செய்த ஒரு மாதத்திற்குள் கட்டத் தவறினால் அடுத்த மாதம் அபராத தண்டத் தொகையில் எது அதிகமோ அவை உங்களது கணக்கில் பதிவாகி விடும். அந்த தண்டத் தொகையை நீங்கள் கட்டியே தீர வேண்டும்.நகரின் பிரதான சாலைகளில் வாகனங்களில் பறக்கும் நீங்கள் உங்கள் கண் முன்னே போக்குவரத்து காவலர் இல்லையே என்ற இறுமாப்பில் நீங்கள் வாகனங்களில் பறந்தால் அபராதம் நிச்சயம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.நகர் முழுதும் SAHER என்று சொல்லக்கூடிய automated traffic control and management system uses the technology of digital cameras network linked with the National Information Center of Ministry of Interior தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.அது போல் சிக்னல்களை (சிகப்பு விளக்கை) கடந்து செல்லும் வாகனங்களும் மேலே குறிப்பிட்டுள்ளது போல் வாகனத்தின் முன் பின் பக்கங்கள் மற்றும் ஓட்டுனரின் முகப்படத்துடன் புகைப்படம் எடுக்கப்பட்டு அபராதம் பதிவாகி விடும்.இதில் முக்கியமாக தெரிய வேண்டிய விபரம்:நகர் முழுதும் செயற்கைகோள் உதவியுடன் அதி நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது போக்குவரத்து விதி முறைகளை மீறுபவர் யாரும் தப்ப முடியாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
மேலும் வாசிக்க.....>http://neetheinkural.blogspot.com/2010/05/traffic-violation.html