பிள்ளைகள் சிறந்தவர்களாக வளர...

முஸ்லிம் சமூகத்தை உற்று நோக்கினால் அபிவிருத்தி, முன்னேற்றம், கல்வி விழிப்புணர்ச்சி என்று அனைத்துத்துறைகளிலும் செயல் இழந்து தவிப்பதை யாராலும் மறுக்க முடியாது.

இந்தப்பின்னடைவிற்கும், கீழ்மட்டத்தை நோக்கிய நகர்வுக்கும் காரணம் என்ன என்பதை நாம் சிந்திப்பதில்லை.

இதற்கு இந்த தலைமுறையிரை குற்றம் சொல்ல முடியாது. கடந்து சென்ற தலைமுறையினர் விட்ட தவறுகளே இன்றைய பரிதாப நிலைக்குக் காரணம். குறிப்பாக சொல்லப் போனால் அதிகமான பெற்றோர்கள் குழந்தைகளை சிந்திக்கும் செயல் திறன் மிக்கவர்களாக வளர்க்கத் தவறி விட்டார்கள்.

எதிர்கால சந்ததியினர் நம்மையும் குறைக்கூற கூடாது என்றால் நாம் சில தீர்மானங்களை, கொள்கைகளை, திட்டங்களை வகுப்பதோடு செயல்படுத்தவும் வேண்டும்.

அல்லாஹ்வின் அருட்கொடைகளில் குழந்தைச்செல்வம் மிக முக்கியமானது, இன்று குழந்தைகள் இல்லாமல் எத்தனையோ தம்பதிகள் கண்ணீரோடும் கவலையோடும் பொறுமையோடும் அல்லாஹ் நாடினால் பிள்ளையினை தருவான் என்று காலம் கடத்தி வருவதை நாம் காண்கிறோம்.

அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கும் இப்பெரும் பாக்கியமான நம் குழந்தைச் செல்வங்களை திறமையாய் முன்மாதிரியாய் எடுத்துக்காட்டாய் ஏன் வளர்க்கக்கூடாது..?
சீர்திருத்தங்களைப்பற்றி சிந்திக்கக்கூடாதா..?
செயல் படுத்த இன்னும் எதற்கு தாமதம்..?

பெற்றோர்களே.. நம் குழந்தைகளை சுயமாய் சிந்திக்கும் திட்டங்களை வகுக்கும் செயலாற்றும் சமூகமாய் நாம் கண்டிப்பாக உருவாக்க வேண்டும்.

இதற்கு அடிப்படையாய் ஆரோக்கியம், கல்வி, நற்சூழ்நிலை குழந்தைகளை சென்று அடைய வேண்டும்.
மேலும் படிக்க...>http://idhuthanislam.com/kudumbham/kuzandhai-valara.htm