அன்புச்சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்புச்சகோதரர்களுக்கு :
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
நபிமொழி : 101 - NABIMOZI – 101

அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்:
'நபி(ஸல்) அவர்கள் சுத்தம் செய்தல், தலைவாருதல், செருப்பு அணிதல் போன்ற அனைத்துக் காரியங்களிலும் வலது புறத்தில் துவக்குவதையே விரும்புபவர்களாக இருந்தனர்.'' (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 721)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''உங்களில் ஒருவர் செருப்பை அணிந்தால், வலது பக்கத்தில் ஆரம்பிக்கட்டும். அதைக் கழற்றினால், இடது பக்கத்தில் ஆரம்பிக்கட்டும்! முதலில் வலது காலில் அணிவிக்கப்படவும், கடைசியில் கழற்றப்படவும் என்று அமையட்டும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 724)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'நீங்கள் ஆடை அணிந்தால், உளுச் செய்தால் உங்களின் வலது கைகளால் ஆரம்பியுங்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அபூதாவூது, திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 726)

அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்:
''உங்களில் ஒருவர் சாப்பிட்டால், அல்லாஹ்வின் பெயரை நினைவு கூரட்டும்! அதன் ஆரம்பித்திலேயே அல்லாஹ்வின் பெயரை நினைவு கூர மறந்து விட்டால் அவர், 'பிஸ்மில்லாஹி அவ்வலஹுவஆகிரஹு'' (ஆரம்பத்திலும், இறுதியிலும் அல்லாஹ்வின் பெயர் கொண்டு உண்ணுகிறேன்) என்று கூறட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூது, திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 729)

ஜாபிர்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
''ஒரு மனிதர் தன் வீட்டில் நுழையும் போதும், அதை உண்ணும் போதும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், தன் தோழர்களிடம் ஷைத்தான், ''உங்களுக்கு (இன்று)இரவு தங்குமிடமோ, இரவு உணவோ இல்லை'' என்று கூறுவான். வீட்டில் நுழையும் போது அல்லாஹ்வை நினைவு கூராமல் நுழைந்துவிட்டால், ''நீங்கள் இரவு தங்குமிடத்தை பெற்றுக் கொண்டு விட்டீர்கள்'' என்று ஷைத்தான் கூறுவான். மேலும் உண்ணும் போது அல்லாஹ்வை நினைவு கூராவிட்டால் ''நீங்கள் இரவு தங்குமிடத்தையும், இரவு உணவையும் பெற்றுக் கொண்டு விட்டீர்கள்'' என்று ஷைத்தான் கூறுவான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 730)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. நூல்: ( புகாரி,முஸ்லிம் )
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
நன்றி......... A.முஜிபுர் ரஹ்மான் குவைத்