''நகரா'' என்றொரு தொழுகைக்கு அழைக்கும் ஒலிக்கருவி..!!

  மறைந்துபோன ''நகரா'' என்றொரு தொழுகைக்கு அழைக்கும் ஒலிக்கருவி..!!

ஒலிபெருக்கி வசதி இல்லாத அந்த காலத்தில் மக்களை தொழுகைக்கு அழைப்பதற்காக உபயோகத்தில் இருந்த ஒரு பொருள் நகரா.

மோதினார் என்னதான் சத்தமிட்டு பாங்கு சொன்னாலும் சற்று தூரத்தில் உள்ளவர்களுக்கு அது கேட்காது.ஆச்சரியமான விசையம் பெரும்பாலான வீடுகளில் கடிகாரம் கிடையாது.பள்ளிவாசலில் ஒலிக்கும் இந்த நகரா சத்தத்தை வைத்துதான் மக்கள் எளிதில் நேரத்தை அறிந்து கொண்டார்கள்.முஸ்லிம்கள் மட்டுமல்ல,மாற்று மத மக்களையும் அதிகாலை வேளையில் துயில் எழ வைப்பது இந்த நகரா சத்தம்தான். பள்ளிவாசலில் நகராஅடிக்கும் சத்தம் கேட்டு தங்கள் அன்றாட பணிகளை எல்லா சமய மக்களும் மேற்கொண்ட அந்த நாட்கள் பசுமையானவை.
மோதினாருக்கு சந்தோசமான மனநிலை இருந்தால் அது நகராவின்சத்தத்தில் எதிரொலிக்கும்.நின்று நிதானமாக லயத்தோடு ஒலிக்கும் அந்த நகரா சப்தத்தை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

விஞ்சான வசதிகள் வந்தபிறகு பெரும்பாலான தமிழக பள்ளிவாசல்களில்ஒலிபெருக்கிகள் வழியாக பாங்கு ஒலித்துக் கொண்டிருக்கிறது. இன்றைய சின்னப்பிள்ளைகளுக்கு என்னவென்றே தெரியாத இந்த நகராக்களை பல பள்ளிவாசல்களில் பாதுகாத்து வைத்திருக்கின்றனர்.