சாதி வாரியாக கணக்கெடுப்பு: முஸ்லிம்கள் `இஸ்லாம்' என்று குறிப்பிட வேண்டும்

சாதி வாரியாக கணக்கெடுப்பு: முஸ்லிம்கள் `இஸ்லாம்' என்று குறிப்பிட வேண்டும்: 


சென்னை: தமிழகம் முழுவதும் நடந்து வரும் சாதிவாரியாக கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் பெயர்களை சேர்க்க வேண்டும். முஸ்லிம்களில் சாதிகள் இல்லை. ராவுத்தர், தக்கினி லப்பை, மரைக்காயர் என்பது எல்லாம் சாதிகள் இல்லை. எனவே, முஸ்லிம்கள் அனைவரும் `இஸ்லாம்' என்ற மதத்தை மட்டும் குறிப்பிட வேண்டும் என்று இந்திய தேசிய முஸ்லிம் லீக் அறிவுறுத்தியுள்ளது.

இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஒய்.ஜவஹர் அலி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகம் முழுவதும் சாதிவாரியாக கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. இதில், முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் பெயர்களை சேர்க்க வேண்டும். வெளிநாடுகளில் வேலை செய்கின்ற தங்கள் உறவினர் பெயர்களையும் தெரிவிக்க வேண்டும்.

இதற்காக, அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் நிர்வாகிகள், உதவியாக இருக்க வேண்டும்.

மேலும், முஸ்லிம்களில் சாதிகள் இல்லை. ராவுத்தர், தக்கினி லப்பை, மரைக்காயர் என்பது எல்லாம் சாதிகள் இல்லை. எனவே, முஸ்லிம்கள் அனைவரும்
`இஸ்லாம்' என்ற மதத்தை மட்டும் குறிப்பிடவும். கணக்கெடுப்பில் நம் பெயர்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான், நம் உரிமைகளைப் பெற முடியும் என்று கூறியுள்ளார்.