பெற்றோர் தம் தலையாய கடமை

அல்லாஹ் உங்களுக்கு உங்களிலிருந்தே மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான்உங்களுக்கு உங்கள் மனைவியரிலிருந்து பிள்ளைகளையும்பேரக்குழந்தைகளையும் ஏற்படுத்தி உங்களுக்கு நல்ல பொருள்களிலிருந்து ஆகாரமும் அளிக்கின்றான்.


குழந்தைகளை இப்படித்தான் வளர்க்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லுகிறதுஅதன்படி குழந்தைகளை வளர்த்தால் ஒழுக்கமுள்ள பிள்ளைகளாக வளரும்சிறுவயது முதலே அவர்களுக்கு அல்லாஹ் பற்றிய இறைநம்பிக்கைநபிமார்கள்நபித்தோழர்கள்,நபித்தோழியர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றைச் சிறு சிறு சம்பவங்களாக அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்அதுபோன்று உன்னத வாழ்க்கைக்கு ஆசைப்படும்படி அறிவுறுத்த வேண்டும்அந்த ஆசைக்கு அடித்தளங்களாக இறைதூதர் (ஸல்அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள்அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), லி (ரலிமற்றும் நேர்வழிப் பெற்ற நபிதோழர்கள் பற்றிய சம்பவங்கள் குழந்தைகளின் உள்ளத்தைப் பண்படுத்த வல்ல.குழந்தைகள் கேட்கக்கூடிய அறிவுப்பூர்வமான கேள்விகளாகட்டும் மற்றும் ஆன்மீக சம்பந்தப்பட்ட கேள்விகளாகட்டும் அவர்களுக்குத்தகுந்த விளக்கம் கொடுத்து விளங்கப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களை ஊக்குவிக்கவும் வேண்டும்பெற்றோருக்கு நன்றி உடையவராகவும்பெரியோர்களுக்கு மரியாதை செலுத்தக்கூடியவர்களாவும் சிறுவர்களுக்கு அன்பு பாராட்டக்கூடியவர்களாகவும் மற்றும் ஒழுக்ககேடான செயல்களைத் தவிர்ந்து இருக்கவும் வலியுறுத்த வேண்டும்.வெளியில் சென்று கல்வி கற்றுவிட்டு வீடு திரும்பக்கூடிய நம் பிள்ளைகளை அடிக்கடிக் கண்கானித்துக் கொண்டிருக்க வேண்டும்.பிள்ளைகளின் பழக்க வழக்கங்கள் மற்றும் பிள்ளைகளுடன் படிக்கக்கூடியபழகக்கூடியவர்களின் நிலையையும் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்