முஃமினான சகோதரியே!


முஃமினான சகோதரியே! உன் முன்னால் உயர்வான பதினோறு உபதேசங்களை வைக்கின்றோம். உன் நலன் கருதிய மார்க்கச் சகோதரனாய். அவற்றை நீ கடைப்பிடித்துக் கொள். நிச்சயமாக அல்லாஹ் நாடினால் நீ பாக்கியசாலியாக வாழ்ந்து, புகழத்தக்க நிலையில் மரணிப்பாய்.மேலும் இவற்றை கடைப்பிடித்தொழுக அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொள்.

  1. சங்கை மிகு இறை வேதத்திலும் அவனது திருத்தூதரின் நடைமுறையிலும் வணக்கங்களாக மார்க்கமாக்கப்பட்டவற்றில் அல்லாஹ்வை மட்டுமே நீ வணங்கி வர வேண்டும்.  2. கொள்கைகளிலும் வணக்கத்திலும் அல்லாஹ்விற்கு இணை வைப்பதை விட்டும் நீ தவிர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இணை வைப்பது நல்ல செயல்களை அழித்து, நஷ்டத்தை ஏற்படுத்தி விடும்.

  3. பித்அத்துக்களைத் தவிர்ந்து கொள். அது வணக்க வழிபாடுகளில் இருந்தாலும் அல்லது கொள்கைகளில் இருந்தாலும் சரியே. ஏனெனில் பித்அத் அனைத்தும் வழிகேடுகளாகும். வழிகேட்டைப் பின்பற்றுபவன் நரகத்திற்குச் செல்வான். பித்அத் என்பது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்டவையாகும்.
  4. தொழுகையில் முழுமையான பேணுதலுடன் இருந்து வா. நிச்சயமாக யார் தொழுகையைப் பேணி பாதுகாத்து வருகிறார்களோ, அவர்கள் மற்றவற்றையும் மிகப் பேணுதலாக செய்து வருவார்கள். யார் தொழுகையைப் பாழாக்கி விடுகிறார்களோ அவர்கள் மற்றவற்றையும் பாழ்படுத்துபவர்களாவார்கள்.
  5. உனக்கு கணவனிருந்தால் அவனுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள். அவன் விரும்புகின்ற எதையும் நீ மறுத்து விடாதே. அவன் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மாறு செய்யாமல் ஏவுகின்ற அவனது ஏவல் விலக்கல்களுக்கு மாறு செய்யாதே.
  6. உனது கணவன் ஊரிலிருக்கும் போதும் இல்லாத போதும் உனது கற்பையும் அவனது பொருளையும் பாதுகாத்துக் கொள்.
  7. உனது அண்டை வீட்டுப் பெண்களிடம் சொல்லாலும் செயலாலும் அழகிய முறையில் நடந்து கொள்.
  8. உனது பெற்றோருக்கு உபகாரம் செய்வது கொண்டு அவர்களிடம் நன்முறையில் நடந்து கொள்ளவும். அவர்கள் இருவரிடத்திலும் சொல், செயலால் வேதனை செய்யாமலிருப்பதற்கும், நன்மையான காரியங்களில் அவர்கள் இருவருக்கும் கட்டுப்பட்டு நடந்து கொள்ளவும். நன்மையல்லாதவற்றை அவர்கள் ஏவினால் அவைகளுக்கு கட்டுப்படாமல் இருப்பதற்கும் பழகிக்கொள். ஏனெனில் படைத்தவனுக்கு மாறு செய்வதில் படைக்கப்பட்டவர்களுக்கு கட்டுப்படுவதை இஸ்லாம் தடை செய்துள்ளது.
  10. குழந்தைகள் இருப்பின் சிறந்த முறையில் அவர்களுக்கு உண்மை, ஆரோக்கியம், சிரந்த சொற், செயல்கள், நல்லொழுக்கம், அழகிய குணங்கள் போன்றவற்றைக் கற்றுக் கொடுக்க பழகிக் கொள். ஏழு வயதை அடையும் போது தொழும் படியும் ஏவிக்கொள்.
  11. திக்ரு செய்து அல்லாஹ்வை தியானிப்பதையும், தர்மம் செய்வதையும் அதிகப்படுத்திக் கொள். உனக்கும், உனது கணவன், குழந்தைகளுக்கும் போக எஞ்சியவை குறைவாக இருப்பினும் ஏழைகளுக்குக் கொடுத்து உதவிக்கொள். ஏனெனில் நிச்சயமாக தர்மம் தீய விபத்துக்களை விட்டும் பாதுகாக்கிறது.
               
இஸ்லாமிய பெண்ணுக்கு ஒரு நூல்