மெக்காவில் உலகின் மிகப்பெரிய கடிகாரம்மெக்கா,ஆக12:முஸ்லிம்களின் புனித தலமான மெக்காவில் உள்ள பிரமாண்டமான கட்டிடத்தில் உலகின் பெரிய கடிகாரம் பொருத்தப்பட்டு உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.


புனித மாதமான இந்த ரமலான் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து இது முறைப்படி இயக்கி வைக்கப்படும் எனத் தெரிகிறது.

நான்கு பக்கமும் கடிகாரம் இயங்கும் என்பது இதன் கூடுதல் சிறப்பு. 601 மீட்டர் உயரம் உள்ள கடிகார டவரில் பொருத்தப்பட்டுள்ள இந்த கடிகாரத்தின் உயரம் மட்டும் 251 மீட்டர் ஆகும். இஸ்லாமிய பாரம்பரிய கலையை வெளிப்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.