எம்.பி.பி.எஸ்., பி.இ. விண்ணப்பம் சேர்ந்துவிட்டதா? இணையதளத்தில் உறுதி செய்துகொள்ளலாம்

எம்.பி.பி.எஸ்., -பி.டி.எஸ்., பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தங்களது விண்ணப்பம் சேர்ந்துவிட்டதா என்பதை இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்:எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு கிடைத்து விட்டதா என்பதை http://www.tnhealth.org என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். பிளஸ் 2 பதிவு எண், பிளஸ் 2 தேர்வு எழுதிய ஆண்டை இணையதளத்தில் பூர்த்தி செய்யும் நிலையில், விண்ணப்பம் கிடைத்து விட்டதைத் தெரிந்து கொள்ள முடியும். விண்ணப்பம் கிடைத்ததற்கான ஏ.ஆர். பதிவு எண்ணையும் விண்ணப்பதாரர் உடனடியாக குறித்து வைத்துக் கொள்ள முடியும்.

பி.இ. விண்ணப்பம்:

பி.இ. படிப்பில் சேருவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கிடைத்து விட்டதா என்பதை http://www.annauniv.edu என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் உறுதி செய்து கொள்ளலாம்.